Pages

Thursday, March 10, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே- திமுக கூட்டணி பேறம்!

திமுக கூட்டணியில் நடக்கும் இந்த நாடகத்தை பார்க்கும் பொழுது பாரதியின் "நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நெறிக்கெட்ட மாந்தரை பார்க்கும்போது"  வரிகளே எனக்கு நினைவுக்கு வருகிறது.


"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று  மடியும்  இந்த  அடிமையின்  மோகம் ?"

என்ற வரியை மாற்றி

"என்று தணியும் இந்த பதவியின் மோகம்?
என்று  விடியும்  இந்த தமிழனின்  வாழ்வு ?"

என்றல்லவா கேட்க தோன்றுகிறது. 

காங்கிரஸ் 60 தொகுதி வேண்டாம் 63 தொகுதிதான் வேண்டும் என்று அடம்பிடித்துகொண்டு இருந்ததால் கூட்டனியில் இருந்து விலகுவதாக அறிக்கை விட்ட திமுக இன்று 63 இடங்களை கொடுத்து "காங்கிரஸ் இதை பக்தி மனதுடன் ஏற்றுகொள்ளும், ஏனென்றால் 63 நாயன்மார்கள் இருந்தார்கள்" என்று அறிக்கை விடுகிறது. கடவுளே இல்லை என்று கூவும் கட்சிக்கு ஆண்மீகம் எதுக்கு என்று புரியவில்லை. இதை யாரவது கேட்டால் நான் வரலாற்றை கூறினேன், எனது கட்சியின் சித்தாந்தம் மாறவில்லை என்று கூறுவர். இதில் இன்னும் என்ன கொடுமைவென்றால் , பொதுக்கூட்டம் முடிந்ததும் "எங்களுக்கு தண்மானம் இருக்கிறது, காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வரும் என்று நாங்கள் இந்த முடிவை எடுக்கவில்லை" என்றெல்லாம் அறிக்கை விட்ட கட்சி, பாவம் டெல்லி சென்றதும்,  அதன் தண்மானம் எங்கே போனது என்று சொல்ல மறந்துவிட்டது .

திமுக இப்படி இருக்க , நம்ம ஐயா ராமதாஸ், எங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளை ஒருபோதும் விட்டு கொடுக்கமாட்டோம் என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடித்தவர் இன்று ஒரு தொகுதியை இழந்து நிற்கிறார். இதற்கு அவர் கூறும் விழக்கம் கூட்டணி தர்மம். இது திமுகவிற்கு முன்னமே தெரிந்து இருந்தால் ஒரு வேலை திமுக இன்னும் சில தொகுதிகளை பாமகவிடமிருந்து எடுத்துகொண்டிருக்கக்கூடும் மற்றும் அறிக்கைக்கும் தேவையில்லாமல் இருந்திருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, நம்ப பெரியார் கட்சி தமாசு கி. வீரமணி அவர்கள் ஏதோ அவர்தான் உலக தமிழர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் மாதிரி "தமிழகம் மட்டும் இல்லாமல் உலகத் தமிழர்கள் எல்லாம் இந்த திமுக காங்கிரஸ் முறிவை மகிழ்ச்சியுடம் வரவேற்கிறார்கள்" என்ற  அறிக்கையை வெளியிட்டார்.  இப்பொழுது என்ன அறிக்கை விடலாம் என்று இன்னமும் அவருக்கு விளங்கவில்லை.

தனது குடும்பத்தின் உறுப்பினர்களின் மேல் தொங்கும் கத்தியையும் மற்றும் தனது மத்திய அமைச்சர்கள் செய்த(சித்த மருத்துவமனை வழங்களில் ஊழல்) போன்றவற்றிலிருந்து தப்பிக்க திமுகவிற்கு காங்கிரசின் ஆதரவு கட்டாயம் தேவைப்படுகிறது. ராமதாசுக்கோ  தனது மகன் செய்த மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் நடந்த ஊழலிருந்து தப்பிக்க காங்கிரசின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரசுக்கோ தமிழகத்தில் தனது கட்சியினர் டெபொசிட் இழக்காமலிருக்க ஏதாவது ஒரு கூட்டணியில் சவாரி செய்யவேண்டியிருக்கிறது.

இதை அறியாத பாமர கட்சி
தொண்டனின் நிலைமை இன்று அதோகதிதான். கட்சி கொள்கையும் தன்மானமும் தான் முக்கியம் என்று தம்பட்டம் அடித்த திமுக தொண்டன் இன்று தலையில் துண்டு போட்டுகொண்டு வீட்டில் முடங்கிக்கிடகிறான் அவனது தன்மானத்தை காக்க. தனது மகனின் ராஜ்யசபா சீட்டுக்காக தனது சாதினரை கைவிட்ட பாமகவை அவனது சாதிக்காரன் மிரச்சியோடு பாக்கிறான்.

இந்த நாடகத்தை பார்த்துகொண்டு இருக்கிற கட்சி தொண்டன் சோர்ந்துபோய்க்கிடக்கிறான். எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி, வெற்றி கூட்டணி என்று மனசாட்சியே இல்லாமல் அறிக்கைவிடும்போது, அவர்களுக்கு தெரிந்தேயிருக்கிறது இது ஒரு வடிவேலுவின்  அடுத்தப்பட நகைச்சுவை என்று.

Sunday, March 6, 2011

வடை போச்சே- திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவு

நான் சின்ன பையனா இருந்தப்ப நான் கேள்விபட்ட கதை- பாட்டி வடை சுட்டுகிட்டு இருந்தாங்கலாம். அத ஒரு காக்க ஒரு வடைய தூக்கிட்டு பறந்து மரத்துல உட்காந்திருச்சம். அத பாத்த நரி ஒரு தந்திரம் பண்ணுச்சாம். காக்கவ கா கா நு கத்த சொன்னுச்சாம். நரியோட தந்திரம் தெரிஞ்சுகிட்ட காக்கா வடைய கால்ல வச்சிக்கிட்டு கா கா நு கத்துச்சாம். நரி ஏமாந்துடுச்சாம்

நம்ம காங்கிரஸ் திமுக கூட்டணி முறிவு பற்றி படிச்சதும் எனக்கு இந்த கதை தான் ஞாபகத்துக்கு வந்தது. எனக்கு தெரிந்த வரையில் 80'ல்  இருந்த மாதிரி இப்பொழுது காங்கிரெஸ்க்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு வாக்காளர்கள்  தமிழ்நாட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை. அவர்களுக்கு என்று சொல்லி கொள்ளும் பெரிய அளவுக்கு தலைவர்களும் தமிழ்நாட்டில் இல்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து காங்கிரஸ் தனித்து தேர்தலில் போட்டி இட்டதும் இல்லை. ஒரு முறை மூப்பனார் காங்கிரஸ்லிருந்து விலகி தனியாக கட்சி ஆரம்பித்து சைக்கிள் சின்னத்தில் போட்டிட்டார். அதற்கு பிறகு கூட்டணி என்ற குதிரையின் மீது ஏறியே தேர்தல் களம் கன்டது  எல்லா தேர்தலிலும். தனது உண்மையான வாக்காளர்களையும் இழந்தது.

இராகுலின் தமிழ்நாட்டு பயணம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குறிப்பாக இளஞர்கள் மத்தியில் புத்துணர்வு கொடுத்துள்ளது என்பது ஏற்பதற்கில்லை. 14 இலச்சம் இளைஞ்சர்களை புதிதாக சேர்த்ததாக சொல்லும் கட்சி, கூட்டணிக்காக அலைவதிலிருந்து அது எந்த அளவிற்கு உண்மை என்பதை புரிந்துகொள்ளலாம்.

திமுகவின் குடும்ப அரசியல், குடும்பங்களின் அணைத்து துறைகளின் ஆதிக்கம், 2G ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு போன்றவை திமுகவிற்கு எதிராக உள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் மீது மக்களுக்கு அதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிக கோபம் இருப்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இலங்கை தமிழர் பிரச்னை, மீணவர்கள் மீதான தாக்குதல், CVC, CWG ஊழல் மற்றும் நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல் விலை, விலைவாசி உயர்வு போன்றவை காங்கிரஸ்க்கு எதிரான அலையையே மக்களிடம் ஏற்படித்துள்ளது .

நிலைமை இப்படி இருக்க, காங்கிரசின் 60-80 தொகுதி என்பது கேலிக்குரியதே.  திமுகவின் கூட்டணி விலகல் விளக்கம் அதைவிட கேலிக்குரியது. 60 வரை வந்தவர் 3 கூடுதலாக குடுப்பதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை. எதோ இவர்கள் ஒரே அணியில் நின்றி௫ந்தால் வாக்கு பிரியாமல் ஓரளவுக்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. இப்ப அதுவும் போச்சி.  காங்கிரஸ் தனித்து நின்றால் பீகாரில் நடந்தது போல மேலும் ஒரு தோல்வியில் முடிவது நிதர்சன உண்மை. மொத்தத்தில் இந்த திமுக காகா  காங்கிரஸ் நறிய ஏமாத்திடுச்சு.

Friday, March 4, 2011

கவிதை என்ற பெயரில் எனது கிறுக்கல்கள்(பின்குறிப்பு- பிழை இருப்பின் மன்னிக்கவும்)

இமைக்க மறந்தன எனது  விழிகள்
வெள்ளை உடையில் தேவதையாக அவள் !!

அவள் என்னை கடந்து போகையில் மச்சான் உன்னோட ஆளு
போறாட என்று நண்பன் சொல்லுகையில்
சந்தோஷமாக தான் இருக்கு
ஆனால் அவளிடம் தான் சொல்ல முடியவில்லை அந்த 3 வாக்கியத்தை!!

எவ்வளவோ முயற்சித்து பார்த்து தோர்த்துவிட்டேன்
அவளின் பார்வைக்கும் புன்னகைக்கும் என்ன அர்த்தம் என்று
அதனால்தான் காதலித்தவர்கள் சொன்னார்களோ பெண்கள் ஒரு புரியாத புதிர் என்று!!

அவள் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டாள இல்லையா
என்ற குழப்பத்தில் ஆரம்பித்தது எனது இதயத்தின் காதல்
காத்திருப்பு !!

அவ்வளவு சுகமானதா  காத்திருப்பு என்று அன்றுதான்
தெரிந்து கொண்டேன் அவளுக்காக காத்திருக்கையில்!!

பேருந்து நிறுத்தத்தில்
எனது காதலுக்கும் தயக்கத்துக்கும் நடந்த போரட்ட
இடைவெளியில் கடந்து  சென்றுவிட்டால் அவள்.
மீண்டும் தொடங்கியது சண்டை எனது மனதுக்கும்
காதலுக்கும்!!

Monday, February 14, 2011

Naan paditha kavithaigal

கிராமத்து வீட்டின்
வாசல்படிகளில்
அமைதியாய் அமர்ந்திருக்கின்றன
கதைகள்.

படிகளில் அமர்ந்து
பேன் பார்க்கையில்
பாட்டி சொன்னவையாய் இருக்கலாம்.

சிறுகல் பொறுக்கி
பாறை விளையாடுகையில்
சகோதரி சொன்ன
கதைகளாகவும் இருக்கலாம்.

யாரேனும் வந்தமர்ந்தால்
சொல்லி விடும் துடிப்புடன்
எதிர்பார்ப்புகளின் ஏக்கத்தில்
காத்திருக்கின்றன அவை !

நகரத்தில் நடப்பட்டு
ஆண்டுக்கோ ஆவணிக்கோ
கிராமம் திரும்பும் பிள்ளைகளுக்கு
படிகளில் அமர்வது
கௌரவக் குறைச்சலாகி விட்டது.

அவர்கள் உதறிப் போட்ட
செருப்புகளுக்கு அடியில்
நசுங்கியே கிடக்கின்றன
நேசம் சுமந்த
கதைகளின் தொகுப்புகள்.